Friday, July 27, 2018

எதிரிகளையும் நண்பர்களாக்க, நன்மைகளைப் பெற.

ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
ஸம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய 
ஹனுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திரம்

Sunday, July 22, 2018

DUKA NIVARANA ASHTAKAM - MANGALAROOPINI



Mangala roopini madhiyani soolini manmadha paaniyale,  Sangadam neengida saduthiyil vandhidum shankari soundariye,  Kangana paaniyan kanimugam kanda nal karpaga kaminiye,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Kaanuru malarena kadhiroli kaatti kaathida vandhiduvaal,  Thaanuru thavaoli thaaroli madhioli thaangiye veesiduvaal,  Maanuru vizhizhaal maadhavar mozhizhaal maalaigal soodiduvaal,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Shankari soundari chaturmukan potrida sabayinil vandhavale,  Pongari maavinil ponn adi vaithu porindhida vandhavale,  Yenkulam thazhaithida ezhil vadivudane ezhunthanal durgayale,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Dhanadhana dhann dhana thaviloli muzhangida thanmani nee varuvaay,  Gangana gan gana kadhiroli veesida kannmani nee varuvaay,  Banbana bam bana parai oli koovida pannmani nee varuvaay,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Panchami bhairavi parvatha puthri panchanal paaniyale,  Konjidum kumaranai gunamigu vezhanai koduththanal kumariyale,  Sangadam theerthida samaradhu seythanal shakthi enum maaye,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Enniyapadi nee arulida varuvaay en kula deviyale,  Panniya seyalin palan adhu nalamaay palgida aruliduvaay,  Kannoli adhanaal karunayai kaatti kavalaigal theerpavale,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Idar tharum thollai inimel illai endru nee solliduvaay,  Sudar tharum amudhe sruthigal koori sugam adhu thandhiduvaay,  Padar tharum irulil paridhiyaay vandhu pazhavinay ottiduvaay, Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Jeya jeya bala chamundeshwari jeya jeya sridevi,  Jeya jeya durga sriparameshwari jeya jeya sridevi,  Jeya jeya jayanthi mangalakaali jeya jeya sridevi,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Friday, July 20, 2018

NADASWARAN -MANGALAISAI

SRI SUKTHAM

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரதஸ்ர’ஜாம் | ம்த்ராம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
தாம்  ஆவ’ ஜாத’வேதோ க்ஷ்மீமன’பகாமினீ”ம் |
ஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷாஹம் ||
ஶ்வபூர்வாம் ர’தத்யாம் ஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் ர்பயம்’தீம் |
த்மே ஸ்திதாம் த்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
ம்த்ராம் ப்ர’பாஸாம் ஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் த்மினீ’மீம் ஶர’ணஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||
தித்யவ’ர்ணே தஸோ‌உதி’ஜாதோ வஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
ஸ்ய பலா’னி தஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’க்ஷ்மீஃ ||
உபைது மாம் தேகஃ கீர்திஶ்ச மணி’னா ஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் தாது’ மே ||
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’க்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||
ம்த்வாராம் து’ரார்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
மன’ஸஃ காமாகூதிம் வாசஃ த்யம’ஶீமஹி |
ஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||
ர்தமே’ன ப்ர’ஜாபூதா யி ஸம்ப’வ ர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||
ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||
ர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
ர்த்ராம் யஃ கரி’ணீம் ஷ்டிம் பிம்லாம் ப’த்மமாலினீம் |
ம்த்ராம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
தாம்  ஆவ’ ஜாத’வேதோ க்ஷீமன’பகாமினீ”ம் |
ஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம்புரு’ஷாஹம் ||
ஓம் ஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||
ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் னம் ஶும் ஹுபு’த்ரலாபம் தஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ |

Sivapuranam -in Tamil

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

Tuesday, July 17, 2018

OM - VINAYAGAR AGAVAL

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!